பூதலத்தில் புண்ணியனைப்
poodhalathil punniyanaip
பூதலத்தில் புண்ணியனைப் புகழ்வோம்; பாதுகாத்த தயவில் அக மகிழ்வோம்
சூதுகட்கிரையாகி விடாமலே சூழ்ச்சி செய்தாரே காதலி தெமை கண்மணி போலவே.
1. மேதினில் மேன்மை கனம் அவர்க்கே! பேதை கட்குப் பேருதவி அவரே - எந்நாளும் சோதனைகளில் சோர்ந்துவிடாமலே - ஆதரவானார் நாதன் இயேசு அடைக்கலமானவர்
2. மாநிலத்தில் மகிமை அவர்க்குரிமை, மனம் உவந்து சாற்றுதல் இனிமை - என்றுமே பாதகர்க்கருள் பரமனளித்திட - பாக்கியம் பெற்றேன் காதல் கொண்டதும் அற்புதமானது!
3. நானிலத்தில் நவ வருடம் இதில் சாநித்யம் தந்து நடத்துவார் - சந்ததம் வான மண்டல மீதிலே இருந்திடும் - வல்லமையான வான சேனைகளே சேவை புரிந்திடும்.
4. மன்னவனே முன்னணியில் நின்று அன்னவர் உமதடி பெற்றுமே - அன்பினால் இன்னமும் உமதீவுகள் பெற்று மே - இன்பமுற்றுமே பின்னிடாது பிழைத்திடச் செய்யுமே.
5. கன்மலையும் கோட்டையும் ஆகினீர்! கண்மணி போல் காத்திடுவதும் நீர் - கருத்தாய் வன்மை வானிலும் பூவிலும் நீரன்றி - அடியவர்க்கேது? அத்தை வந்திடும் வல்லவர் வேறில்லை.