பொன்னகர் இன்பத்தைப் போற்றிடுவோம்
ponnagar inbathaip potriduvom
1. பொன்னகர் இன்பத்தைப் போற்றிடுவோம் துன்பமும் துக்கமும் மாறியேபோம் நன்மை சொரூயஅp;பியைத் தரிசிப்போம் நீடூழி காலம் பேரின்பம் உண்டாம்.
பேரின்பமாம் பூரிப்புண்டாம் பேரின்பமாம் பூரிப்புண்டாம் மேலுலகில் அவர் சந்நிதியில் மேலான வாழ்வு பேரின்ப முண்டாம்.
2. மாட்சிமையான காருண்ணியத்தால் மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால் சாட்சாத் நல்மீட்பரை நோக்குவதால் நீடூழி காலம் பேரின்பம் முண்டாம்.
3. அன்பராம் இஷ்டரைக் கண்டு கொள்வோம் இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம் என்றைக்கும் யேசுவை ஸ்தோத்தரிப்போம் நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.