பொன்னடி எடுத்து வைத்தான்
ponnadi eduthu vaithaan
பொன்னடி எடுத்து வைத்தான் பூமியில் யேசு பிரான் மண்ணகம் தழைத்திடவே இங்கு மாந்தர்கள் வாழ்ந்திடவே
சின்னவிழி பார்வையெல்லாம் சித்திர சோலைகளாய் மன்னவனின் விழிதனிலே - இன்று மலர்ந்திட கண்டோமே நீலக்கரு மேகங்களில் நின்றிடும் விண்ணொளியே
ஞாலமெல்லாம் ஒளி காட்டும் - மெய் ஞானத்தின் விண்மலரே ஆலயத்தின் மணியோசை ஆண்டவன் குரலோசை காலம் எல்லாம் வழி காட்டும் - நம் தேவனின் அருளோசை