பொங்குதென் உள்ளம்
pongudhen ullam
பொங்குதென் உள்ளம் நிறைந்த - என்னேசுவே பங்க மில்லா உம்மன்பினால்
ஆசையுடன் - நேசருமது பாசக் கரத்தில் - பறந்திளைப்பாறுவேன் - பொங்
1. பாடி புகழுதே என் அதரங்களும் நாடி மகிழுதே என் அந்தரங்கம் நாடோறும் அளிக்கும் நின் கிருபைகளை நாடு தென் ஜீவனும் நீடூழியாய் - பொங்
2. நிந்தையும் துயரும் சந்திக்கும் வேளை அந்தோ சூழ் இருளாம் சாவின் நிழல்தனில் எந்தையே சீயோனின் கதிர்போல் விந்தையாம் அந்தமான் சோகையால் நடத்துவார் - பொங்
3. மீட்சி செய்தவரே வீழ்ச்சியில் நின்றுமே ஆட்சி செய்யவே நான் என்றும் உம்முடனே மாட்சியில் மிகுநின் நேசக் கடாட்சத்தால் காட்சியில் கொண்டீரே தூசியென்னை - பொங்
4. மேவியே முலையில் பொன் வெள்ளி நிகராய் லேவியின் சுதரை சுத்தி செய்பவரே ஏவியே என்னையும் சுத்திசெய் துமைப்போல் சேவிக்க ஆவியே! மாற்றிடுவார் - பொங்
5. நற்கிரியை யெனில் உற்பவம் செய்தீரே தற்பரா! உமது நாள் வரை நடத்தி சொற்படி வழுவா சந்நிதி வரவே முற்றுமாய் ஏற்றென்னை ஆண்டிடுவீர்! - பொங்