பொங்குதே இன்பம் புன்னகை
pongudhae inbam punnagai
பொங்குதே இன்பம் புன்னகை பொங்கும் பொன்னான நாளிது இல்லையே துன்பம் எண்ணிலா நன்மைகள் நம் இயேசு தந்தாருங்க
பாடு பாடு தாளத்தோடு பாடு வல்லவராம் இயேசுவை கொண்டாடு
பெருகுமே பெருகுமே நன்மைகள் பெருகுமே வருகுதே வருகுதே ஆசீர்வாதம் வருகுதே பூரணத்தை கொண்டாடும் பண்டிகை இது ஆண்டவரின் அநுக்கிரகம் பொங்கி வழியுதே
விளைவிலே ஆண்டவருக்கு முதன்மையை எடுத்து நிறைவிலே தந்து நாம் கனம்பண்ணுவோம் அறுவடை நாளின் பண்டிகை இது ஆண்டவரின் கட்டளையால் நடந்தேறுதே