பொல்லார் சதிக்குள்ளாகி
pollaar sadhikkullaagi
பொல்லார் சதிக்குள்ளாகி எல்லையில்லா தொல்லை மேவி - 2 அல்லலுற கல்வாரிக்கு - 2 புலி மெல்ல மெல்ல செல்கின்றீரோ - 2
ஆதம் ஏவை பாவம் நீங்க மீதலம் விட்டாதிபனே - 2 பூதலத்தில் பாதகரால் - 2 வேதனை மிகவடைந்து - 2
உற்றோரும் மற்றோரும் முன் பின்னாலே புலம்பி வர - 2 பற்றுடனே உற்ற மொழி - 2 பரனே உரைத்திடாமல் - 2
வாராலடித் திகைந்து தீராத் துயரடைந்து - 2 பாரமான சிலுவை தானே - 2 பார்த்திபனே நீர் சுமந்து - 2
திருக் கரங்கால் நடுங்க சீமோனோர் பக்கம் பிடிக்க - 2 உருக்கமுடன் நெருக்கமதில் - 2 ஓகோ! விழுந் தெழுந்து - 2