பிறந்தாரைய்யா பிறந்தாரு
pirandhaaraiyyaa pirandhaaru
பிறந்தாரைய்யா பிறந்தாரு எங்க இயேசு ராஜன் பிறந்தாரு பிறந்தாரம்மா பிறந்தாரு எங்கே இயேசு ராஜன் பிறந்தாரு பாவிகளை இரட்சிக்கவே (2) மனித ரூபம் எடுத்தார் இந்த பூவுலகில் (2)
1. நீதியின் சூரியன் உதித்ததிங்கே விண்ணவர் போற்ற மண்ணவர் மகிழ அவர் பிறந்தாரைய்யா ஜோதியாய் பிறந்தாரைய்யா அவர் பிறந்தாரம்மா ஜோதியாய் பிறந்தாரம்மா பிறந்தாரைய்யா பிறந்தாரம்மா ஜோதியாய் - இயேசு
2. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மரியின் வயிற்றில் மன்னவனாக அவர் பிறந்தாரைய்யா மன்னவனாய் பிறந்தாரைய்யா அவர் பிறந்தாரம்மா மன்னவனாய் பிறந்தாரம்மா பிறந்தாரைய்யா பிறந்தாரம்மா மன்னவனாய் - இயேசு
3. மகிமையின் தேவன் பிறந்தாரே மகத்துவ ராஜன் பிறந்தாரே அவர் ரூபமெடுத்தார் அடிமையின் ரூபமெடுத்தார் அவர் கோலமெடுத்தார் வறுமையின் கோலமெடுத்தார் தூதர்கள் பாட மேய்ப்பர்கள் போற்ற பிறந்தாரே - இயேசு