பிறந்தார் பிறந்தார் இயேசு
pirandhaar pirandhaar yesu
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனாய் பாரினில் இயேசு காரிருள் வேளையில் குளிரில் கன்னியின் மகனாய் உதித்தார்
போற்றுவோம் புகழ்வோம் வாழ்த்துவோம் வணங்குவோம் பாலன் இயேசுவையே துதிப்போம்
ஏசாயா வாக்கு நிறைவேற ஈசாயின் அடிமரம் துளிர்த்ததே யாக்கோபில் ஓர் வெள்ளி தோன்றியதே யாவரையும் மீட்க உதித்ததுவே
வானில் தூதரும் பாடிட கான மெய்ப்பரும் கண்டிட ஞானியை வெள்ளி வழி நடத்த காணிக்கை தந்து மனமகிழ பிறந்தார்
துன்பம் துயரங்கள் இனி இல்லை துயரம் துடைப்பவர் பிறந்தாரே பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே பரிசுத்தர் பாரினில் பிறந்தாரே