பிரதிஷ்டை செய்ய வாரும்
piradhishtai seyya vaarum
பிரதிஷ்டை செய்ய வாரும் பெரியோனே இந்த வீட்டை நரரான நாங்கள் தினம் துதி பாடி ஜெபித்திட
1. நாச உலகமதில் வாசம் செய்கிறபோது நேசா! நீர் கிருபையா யீந்தீரே இவ்விடத்தை
2. கர்த்தர் வீடு கட்டாராகில் கட்டுபவர் பிரயாசம் வீண் மெத்தவும் வேலைகள் செய்து போஜனம் புசிப்பது வீண்
3. இந்த மனையில் வாசம் செய்யும் பிள்ளைகள் மேல் சந்ததமும் கிருபை கூர்ந்திடும் அன்பினாலே
4. அக்கினி புசல் காற்று ஆபத்து துன்பம் தொல்லை பிணி மரணம் மோசம் வராமல் காருமையா
5. தங்கி ஜெபிக்கும் ஜனம் சத்திய ஆவியினால் பொங்கிப் பூரித்து புதுப் பிறவியாய் மாறச் செய்யும்
6. தேவா! காரும் தேவ தூதர் துணையுமிங்கே காவலாய் நிற்க வேணும் கலக்கமில்லாமல் காரும்
7. நித்திய வீடு பரலோகத்தில் எமக்குண்டு பக்தியுள்ளோர்க்காய் யேசு வைத்தாரதையே மீண்டு
8. பிதா சுதன் ஆவியர்க்கும் தோத்திரம் தோத்திரமே ஆதி முதலே எல்லாக் காலமு முண்டாகவே