பிராத்தனை கேட்கணும்
piraathanai ketkanum
பிராத்தனை கேட்கணும் என் அன்பு இயேசப்பா கண்ணீரின் ஜெபத்திற்கு பதில் தாங்க இயேசப்பா
தாங்கப்பா இப்போ தங்கப்பா தாங்கப்பா பதிலை தாங்கப்பா
எலியா என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரே எளியவன் நானும் இன்று ஜெபிக்கின்றேனய்யா
ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்க இந்த அடிமையின் கதறலுக்கு செவி சாய்ங்கப்பா
பர்த்திமேயு கூக்குரலைக் கேட்டீங்களே அப்பா என் பரிதாப நிலையெல்லாம் மாற்றுங்களே அப்பா என் தேச பரிதாப நிலையை எல்லாம் மாற்றுங்களே அப்பா
ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் எங்கள் ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா