பின்மாரியின் நாட்கள் இதுவே
pinmaariyin naatkal idhuvae
1. பின்மாரியின் நாட்கள் இதுவே அபிஷேக நாட்கள் இதுவே அற்புதங்களின் நாட்கள் இதுவே எழுப்புதல் நாட்கள் இதுவே
அக்கினி தேவனின் அக்கினி தேசத்தில் எழும்பட்டுமே அக்கினி தேவனின் அக்கினி பற்றியே எரியட்டுமே
2. பெந்தேகோஸ்தே நாளைப் போல ஆவியால் எம்மை நிறைத்திடுமே வரங்களாலும் பாஷைகளாலும் உலகத்தை நாங்கள் கலக்கணுமே
3. பரத்திலிருந்து இறங்கிடுமே வல்லமை அங்கு வெளிப்படுமே நாவுகள் யாவும் அறிக்கையிட்டு நீரே தேவனென்று முழங்கிடுமே