பின் செல்வேன் என் மீட்பரே நானும்மைப்
pin selven en meetparae naanummaip
பின் செல்வேன் என் மீட்பரே நானும்மைப் பின் செல்வேன் என் மீட்பரே.
நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்.
1. என் சிலுவை எடுத்தேன் எல்லாம் விட்டு என்றும் நின்னை அடுத்தேன் நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் வாழ்வேனுன் சித்தம் என்றும் செய்து.
2. சிங்கம் போலே கெர்ச்சித்தே எந்தன் நேசரே சீறி மிக எதிர்த்தே கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும் கடியின் மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று.
3. நெருக்கம் செய்தால் மனுஷர் அதென்னையுன் நெஞ்சண்டை யோட்டுவதாம். பாரிடத்தில் பல சோதனை வதைத்தாலும் பார்த்திபனே உன்னை ஒரு போதுமே விடேன்.
4. காசினியோர்கள் என்னைப் - பகைத்தாலும் காதலனேசு உன்னைப் பாசமதாகவே பணிந்து தொழுவேனே பாக்கிய நகரில் பின் உன்னோடு வாழ்வேனே.