பிளவுண்ட மலையே புகலிடம்
pilavunda malaiyae pugalidam
பிளவுண்ட மலையே புகலிடம் தாரும் பின்னோக்கி நான் செல்வேனோ யாரிடம் சொல்வேன் இனி எங்கு செல்வேன் இயேசுவே இரட்சியுமே
அன்றொரு நாள் ஆழ்கடலில் மூழ்கி அழுதானே பேதுருவும் ( 2 ) அன்புகரம் நீட்டி அணைத்து எடுத்தீரே ஆதரியும் என்னையும் ( 2 ) இயேசுவே இரட்சியுமே
தனியாக சென்றானே தானியேல் குகைதனில் தூதர்கள் காத்தனரே தயவாக என்னையும் தாங்கி நடத்தியே துன்பத்தில் ஜெயம் தாருமே இயேசுவே இரட்சியுமே