பிளந்ததோர் கன்மலையே
pilandhadhor kanmalaiyae
பிளந்ததோர் கன்மலையே உம்மில் நான் மறைகின்றேன் – 2 அடைக்கலமே எந்தன் ஆறுதலே உம் ஆவியே எந்தன் ஆதாரமே – 2
1. உலகத்தில் துன்பம் உண்டு அதை வென்றவர் அருகில் உண்டு – 2 அக்கினி அம்புகள் எதிராய் வந்தாலும் தம் சிறகின் நிழலில் மறைந்திடுவேன் – 2
2. தனிமையில் நீ தவிக்கும் போது துணையில்லை என்றென்னும் போது – 2 தலை சாய்த்திட கல் மாத்திரம் என்றாலும் தம் தூதரின் சமூகம் இறங்கிடுமே – 2