பிதாவுக்கு ஸ்தோத்திரம்
pidhaavukku sthothiram
பிதாவுக்கு ஸ்தோத்திரம் தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம் இன்றும் என்றுமே
பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார் சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார்
சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே சேனை சேனை தூதர்களை தந்து விட்டாரே
வருடத்தை நன்மையால் நிறைப்பவரே வார்த்தையினால் அதிசயங்கள் காணச் செய்யுமே
சீக்கிரமாய் வரப்போகும் ஆத்ம நேசரே சீக்கிரமாய் காண்பேன் பொன் முகத்தையே
இரட்சகராம் இயேசு என் உள்ளம் வந்தாரே ஆவியின் அபிஷேகத்தை ஊற்றி விட்டாரே