பிதாவைப் போற்றுவேன்
pidhaavaip potruven
பிதாவைப் போற்றுவேன் இயேசுவை வாழ்த்துவேன் ஆவியானவரே உம்மைப் பாடிடுவேன் ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
மனிதனுக்காய் உயிர்கொடுக்க மானிட ரூபத்தில் வந்தவரே ராஜாதி ராஜன் தேவாதி தேவன் மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
சிலுவையிலே தொங்கும் நேரம் கள்ளனையும் நீர் மன்னித்தீரே அடிமையையும் மன்னியுமே அண்ணலே உந்தன் தயவாலே
சோதனையில் நான் தேற்றப்பட தேற்றரவாளனை தந்தவரே பரிசுத்தமாய் வாழ்வதற்கு பரிசுத்த ஆவியால் நிறைப்பவரே