பிதாவை ஆராதிப்பேன்
pidhaavai aaraadhippen
பிதாவை ஆராதிப்பேன் இயேசுவை ஆராதிப்பேன் கர்த்தரை ஆராதிப்பேன் ஆவியை ஆராதிப்பேன்
1. காருண்ய நாதா கனியீந்த நாதா சிநேக நாதா வாரும் - 2 என்னுள்ளே நின்று என்னோடு சேர ஆத்மாவின் நாதா வாரும்
2. உருவாக்கினோனே, உபயோகித்தோனே வாழ்த்தி போற்றிடுவேன் - 2 மாறாத நேசா மனுவேலின் தேவா நவமான நித்யானந்தா
3. நிந்தையை நீக்கி நன்மை தந்தோனே போற்றி பாடிடுவேன் - 2 ஆபத்து நாளில் அண்டினோர்களை அரவணைத் தாதரித்தீர்
4. நாள் தோறும் நடத்தி, வழுவாமல் காத்த கர்த்தனை துதித்திடுவேன் - 2 சித்தம் கொண்டென்னை, சுத்தம் செய்து நித்தம் ஜொலித்திட செய்தீரைய்யா