பிதாவே ஆராதிப்பேன்
pidhaavae aaraadhippen
பிதாவே ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன் ஆவியே ஆராதிப்பேன் திரியேகரை ஆராதிப்பேன்
நாள் தோறும் நடத்தி வழுவாமல் காத்த கர்த்தனை துதித்திடுவேன் (2) சித்தம் கொண்டென்னை சுத்தம் செய்து நித்தம் ஜொலித்திட செய்தீரைய்யா
உருவாக்கினோனே உபயோகித்தோனே வாழ்த்தி போற்றிடுவேன் (2) மாறாத நேசா மனுவேலின் தேவா நவமான நித்தியானந்தா
காருண்ய நாதா கனியீந்த நாதா சிநேக நாதா வாரும் (2) என்னுள்ளே நின்று என்னோடு சேர ஆத்மாவின் நாதா வாரும்
நிந்தையை நீக்கி நன்மை தந்தோனே போற்றி பாடிடுவேன் (2) ஆபத்து நாளில் அண்டினோர்களை அரவணைத் தாதரித்தீர்