பிதா குமாரன் பரிசுத்த
pidhaa kumaaran parisutha
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம் திரித்துவ தேவனை துதித்திடுவோம்
நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில் சேரக்கூடாத ஒளிதனில் மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும் பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்
பாவத்தின் கோர பலியான சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு பாவிகளுக்காய் ஜீவன் தந்த தேவகுமாரனை ஸ்தோத்தரிப்போம்
வல்லமையோடு வந்திறங்கி வரங்கள் யாவும் நமக்கீந்த ஆவியின் வழியை தினம் காட்டும் பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்
அனல்போல் சோதனை வந்தாலும் அக்கினி ஊடாய் நடந்தாலும் சோதனை நம்மை சூழ்ந்தாலும் ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம்
வானவர் விரைவில் வந்திடுவார் வாரும் என்றே நாம் அழைப்போமே வானவருடன் சேர்ந்திடும் நாள் விரைவில் நெருங்கிட ஸ்தோத்தரிப்போம்