பெத்லெகேமில் பிறந்தீரே
pethlegemil pirandheerae
பெத்லெகேமில் பிறந்தீரே மாட்டுத் தொழுவத்தில் தவழ்ந்தீரே - 2 அன்னை மரியின் மடியின் மீது பாலகனாய் உறங்கினீரே - 2
1) வானாதி வானங்களை படைத்தவரே பூலோகத்தையும் படைத்தீரே மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லெகேமில்
2) சர்வ சிருஷ்டிக்கும் அதிபதியே சகல வல்லமையும் உடையவரே மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லகேமில்
3) தூதர் கூட்டம் போற்றியதே வானத்தில் அடையாளம் தோன்றினதே மனிதனாம் என்னை மீட்கும்படி மானிடனாய் உலகில் வந்தீரே - பெத்லகேமில்