பெத்லகேம் ஊரில் பிறந்தன
pethlagem ooril pirandhana
பெத்லகேம் ஊரில் பிறந்தனர் இயேசு இரட்சகராக இகமதிலே
பரிசுத்த ஆவியால் அவதரித்தனர் கன்னிகை மரியின் மகவாக - 2
நானிலம் தனிலே இயேசு பிறந்தார், நாதனின் ஜெனனம் அதிசயமே ஜீவனும் வழியும் சத்தியமும் அவர் நித்தமும் அவரைத் துதிப்போமே
மாட்டின் தொழுவம் தானதில் உதித்தார் மகிமையின் தேவன் மறு உருவாய் கர்த்தரின் மகிமை தூதனுடனே ஆயர்கள் காண தோன்றியதே
இதோ நற்செய்தி உங்களுக்காக பிறந்தனர் ஏசு தாவீதின் ஊரில் என்றுரைத்திடவே பரலோக சேனை பாங்குடன் தோன்றி பாடினரே
ஆயர்கள் கூடி அமலனைத் தேடி அனைவரும் சென்றனர் அன்றிரவில் பிரிவினை யாகிய நடுச்சுவர் தகர்க்க பாரினில் வந்து தோன்றினாரே
பாவங்கள் நீக்கி பாரினில் எம்மை பரிசுத்தம் செய்ய பிறந்தாரே தேவனின் ரூபம் தேவனின் சாயல் மாந்தர்கள் எமக்கு அளித்திடவே