பெத்லகேம் என்னும் அப்பத்தின்
pethlagem ennum appathin
பெத்லகேம் என்னும் அப்பத்தின் வீட்டில் வந்த நிலவே தித்திக்கும் மன் நற்கருணையாக வந்த அமுதே என்னோடு தங்கிடவா என் இயேசு பாலகா உன்னோடு என்னையும் விண்ணோடு மண்ணையும் இணைக்கும் பாலமே வா
ஆதி மனிதன் பாவம் செய்து ஒழிந்த போதிலே ஆடையாகி மூடும் அருளின் குழந்தையானிரோ ஆடு மேய்க்கும் ஆபேல் தந்த ஆட்டின் இரத்தம் போல் ஆன்ம மீட்பின் விலையான ஆட்டுக் குட்டியானிரோ
நேர்மை என்னும் இடைக்கச்சை உடுத்திக் கொள்ளவா உண்மை என்னும் இடைக்கச்சை உடுத்திக் கொள்ளவா தூய்மையின் ஆடையில் என்னையும் மூடிடவா பாலா தேவா நாதா நீ வா