பெரிய காரியம் செய்யும்
periya kaariyam seyyum
பெரிய காரியம் செய்யும் தேவனே! மண்ணாம் எனும் நீர் நேசித்ததேனையா? ஜெயத்தின் மேல் ஜெயமே எப்போதும் எனக்கு ஜெயித்த இயேசு என்னோடிருப்பதால்
1. யாவும் எனக்காய் செய்து முடித்தீர் யாருண்டு உம்மையல்லால் இயேசு நாயகா! வாழ்வதால் ஏழை எனையும் நினைந்து தள்ளிடாது சேர்த்ததுந்தன் கிருபையே! - பெரிய
2. என்னை இழுத்துக்கொள்ளும் ஓடி வருவேன் நான் திராட்சரசத்தினாலும் உம் அன்பு இனியது உந்தன் நாமம் ஊற்றுண்ட தைலம் உத்தமரே உம்மை நேசித்திடுவேன் - பெரிய
3. அக்கினி யில் மலர்ந்த மலர் நானையா! வெயில் சோதனையில் பாடிடுவேன்? பாதாள போன்ற கொடிய அன்பினால் பாதாளத்தின் வல்லமையை ஜெயிப்பேன் - பெரிய
4. என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாம் செய்திட பெலன் உண்டு எனக்கு சத்துரு சீறி வெள்ளம் போல் வந்தாலும் சத்தியரே ஜெயக்கொடி ஏற்றுவீர் - பெரிய
5. தேவரீர் சகலமும் செய்ய வல்லவர் செய்ய நீர் நினைத்தது தடைபடாது வழுவாதெந்தனைக் காத்திடும் தயவால் பழுதில்லாதுந்தன் முன் நிறுத்திடும் - பெரிய