பேரின்பக் கண்மலையே
perinbak kanmalaiyae
பேரின்பக் கன்மலையே-என்னை வாரி அணைத்துக் கொள்ளும் யாரையும் நம்பி விடேன்-இந்த நானில மீதினிலே
வேறு துணை இல்லையே இளைப் பாறுதலைத் தாரும் தேசத்தை விட்டு வந்தேன்-பிள்ளைப் பாசத்தையும் பிரிந்தேன்
நேசத்தைத் தந்து என்னை-இங்கு மீட்டவரே வாரும் ஆயனே இங்கு வந்து- என்னை ஆதரித்துக் கொள்ளும்
வேதத்தில் மனம் லயித்தேன்-உமது போதனையில் திளைத்தேன் என் மகனே என்று-என்னை நீர் கூப்பிட்ட குரல் கேட்டேன்
அந்நியன் என்றே என்னை-கணமும் தள்ளி விடாதேயும் அந்தி பகல் மறையும்-அப்பா உன் ஆறதல் மறைந்திடுமோ
மந்திர மாயமெல்லாம்-உமது மலரடி கண்டிடுமோ ஐயனே அழைக்கின்றேன்-என் அருகினில் வாருமையா