பெலனுள்ள நகரமாம்
pelanulla nagaramaam
பெலனுள்ள நகரமாம் இயேசுவண்டை பயமின்றி ஓடி நீ வந்திடுவாய் சஞ்ஜலத்திற்கொரு வழி இல்லையே சந்ததம் அவர் நம்மை காத்துக்கொள்வார் - 2
1.கழுகுபோல் பறந்து நீ உன்னதத்தில் வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக்கொள் காத்திருந்திடுகையில் ஈந்திடுவார் பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு - 2
2.மரணம்தான் வருகிலும் பயப்படாதே விரைந்துன்னை கர்த்தர் தாம் காத்திடுவார் யாதொன்றும் உன்னை பயப்படுத்த எங்குமில்லை என்று விசுவாசிப்பாய்- - 2
3.ஆறுதல் அடையும் அந்நாடு என்று இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன் பரமசுகம் தரும் ஊற்றுகளில் பர னோடு நித்தியம் நானும் சேர்வேன் - 2