பெலனே பெலனே பெலனே
pelanae pelanae pelanae
பெலனே பெலனே பெலனே என்தெய்வமே என் பெலன் - (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - (3)
எனது பெலத்தினாலும் அல்ல எனது வல்லமையாலும் அல்ல தேவ ஆவியாலே ஆகும் - (2)
1.என்பெலனாகிய தேவனை கெம்பீரித்து நான் பாடுகிறேன் யாக்கோபின் தேவனை ஆர்ப்பரிப்பேன்
என்பெலனாகிய தேவனை கெம்பீரித்து நாங்கள் பாடுகிறோம் எங்களின் தேவனை ஆர்ப்பரிப்போம்
2.என் பெலவீனத்தில் உமது பெலன் பூரணமாய் விளங்கிடுதே உமது கிருபை போதுமையா - (2)
3.தளா்ந்துபோன கைகளை தள்ளாடும் எங்கள் முழங்காலை உமது பெலத்தால் நிரப்புகிறீா் - (2)
4.எதிரியை நாங்கள் ஜெயிக்கவே பாலகா் வாயிலே துதியை வைத்தீா் உமக்கு என்றும் நன்றி ஐயா எதிரியை நாங்கள் ஜெயிக்கவே எங்களின் வாயிலே துதியை வைத்தீா் உமக்கு என்றும் நன்றி ஐயா
5.துதிக்க துதிக்க பெலன் வருதே உம்மை பாட பாட பெலன் வருதே உம்மை உயா்த்த உயா்த்த பெலன் வருதே - (2)