பெலன் இன்றி நிற்கிறாயோ
pelan indri nirkiraayo
பெலன் இன்றி நிற்கிறாயோ சோர்வினால் களைக்கின்றாயோ பெலப்படுத்தும் ஒருவர் உண்டு சத்துவத்தை பெருக செய்யுவார்
பல்லவி
காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு
உதவி இன்றி தவிக்கின்றாயோ ஒருவரும் இன்றி அழுகின்றாயோ உதவிடும் கன்மலை அவர் தான் உனக்கொத்தாசை என்றும் அவரே
பல்லவி
காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு
வேதனை உன்னை ஆளுகின்றதோ வியாதிகள் உன்னை தாக்குகின்றதோ சுமந்து செல்லும் தேவன் அவர்தான் புது பெலன் தந்து தாங்கிடுவார்
பல்லவி
காத்திரு காத்திரு கர்த்தருக்கே காத்திரு எழும்பிடு எழும்பிடு புதுபெலனோடு எழும்பிடு