பெலன் இல்லா நேரத்திலே
pelan illaa nerathilae
பெலன் இல்லா நேரத்திலே பெலன் தந்து தாங்கிடும் திடன் இல்லா நேரத்திலே திடன் தந்து தாங்கிடும் – 2 சோர்வுற்ற வேளைகளில் சோர்ந்திடமால் தாங்கிடும் உம் பெலன் தந்து தினம் தாங்கிடும் – 2
உம் பெலன் வேண்டுமே உம் பெலன் வேண்டுமே உம் பெலன் தந்து தினம் தாங்க வேண்டுமே – 2
1. தாவீதை போல் கோலியாத்தை முறியடிக்கும் பெலன் தாருமே – 2 யோசுவாவை போல் யோர்தானை கடந்திடும் பெலனை தினம் தந்திடும் – 2
2. மோசையை போல் வழி நடத்தும் உம்முடைய பெலன் தாருமே – 2 எலிசாவை போல் இருமடங்கு வல்லமை தந்து தினம் நடந்திடும் – 2
3. ஆபிராகாமை போல் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் பெலன் தாருமே – 2 பவுலை போல் உம் வார்த்தை சொல்ல பெலனை தந்து தினம் நடந்திடும் – 2