பெதஸ்தா குளம் தண்டியில்
pedhasthaa kulam thandiyil
பெதஸ்தா குளம் தண்டியில் அன்று இயேசு வந்து நின்றார் -2 பெலன் அளித்தார் சுகம் கொடுத்தார் அன்று முடவன் எழுந்து நடந்தான் அற்புதம் செய்தார் அதிசயம் செய்தார் இன்று உனக்கும் செய்திடுவார்
கண்ணீரில் தவிக்கின்ற ஐயோ கவலையில் மடிகின்றன - 2 இன்று அழைத்தால் அவர் வருவார் உன் கண்ணீரை துடைத்து விடுவார் கலங்காதே என் மகனே உன் கவலை மாற்றிவிடுவார்
அவரே உன் பெதஸ்தா ஏசுவே உன் பெதஸ்தா - 2 அந்த பெதஸ்தா செய்யாத கிரியைகளை இந்த பெதஸ்தா இயேசு செய்திடுவார் - 2
வியாதியின் வருத்தங்களோ வறுமையின் பாடுகளோ - 2 என்று அழைத்தால் அவர் வருவார் உன் வறுமைகளை அவர் மாற்றிவிடுவார் அவர் உனக்காய் காயம் அடைந்தார் அவர் தழும்புகளால் சுகம் அடைந்து விடுவாய்
பாவத்தின் சாபங்களும் பிசாசின் சோதனையோ - 2 இன்று அழைத்தால் அவர் வருவார் உன் சாபங்களை அவர் நீக்கி விடுவார் அவர் உலக இரத்தம் சிந்தினார் அவர் ரத்தத்தினால் பாவம் கழுவி விடுவார்