பயப்படாதிருங்கள் பரன்
payappadaadhirungal paran
பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார் கவலைப்படாதிருங்கள் கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்
முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட இயேசு பிறந்தாரே மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட இயேசு பிறந்தாரே
உதித்தார் உதித்தார் கெம்பீரமாய் நாம் மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்
கன்னிமரியின் மடியினில் பாலன் இயேசு பிறந்தாரே எண்ணில்லாதூதர்கள் இன்னிசை பாடிட இயேசு பிறந்தாரே
மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம் கொண்டிட இயேசு பிறந்தாரே விண்ணையும் மண்ணையும் ஒன்றாக இணைத்திட இயேசு பிறந்தாரே
அதிசய தேவன் அற்புதராஜன் இயேசு பிறந்தாரே காரிருள்நீக்கிட பேரொளியாகவே இயேசு பிறந்தாரே