பயப்படாதே வெட்கமடைவதில்லை
payappadaadhae vetkamadaivadhillai
பயப்படாதே வெட்கமடைவதில்லை அஞ்சிடாதே இலச்சையடைவதில்லை
வெட்கப்பட்ட நாட்களை நீ மறந்திடுவாய் இனி என்றும் நிந்தையை நினையாதிருப்பாய்
1.படைத்தவரே உனது மணவாளன் அவர் நாமம் படைகளின் ஆண்டவர் இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர் அவர் சர்வ பூமிக்கும் தேவனானவர்
2.மலைகள் எல்லாம் விலகியே போனாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்து மறைந்தாலும் கிருபை மட்டும் உன்னை விட்டு விலகாது சமாதான உடன்படிக்கை முடிவுறாது
3.உனக்கெதிராய் உருவாகும் ஆயுதங்கள் உன் வாழ்வில் ஒரு நாளும் வாய்த்திடாதே எதிராகத் தீர்ப்பு சொல்லும் நாவுகளை குற்றப்படுத்தி அடக்கிடுவாய் ஜெயித்திடுவாய்
4. உருக்கமான இரக்கங்களால் சேர்த்துக் கொண்டார் என்றுமுள்ள பேரன்பால் இரங்கிவிட்டார் கோபம் கொள்வதில்லை என்று ஆணையிட்டார் கடிந்து கொள்வதில்லை என்று வாக்களித்தார்
5. கூடாரத்தை இன்னும் இன்னும் விரிவாக்கு விசுவாச அடித்தளத்தை பலப்படுத்து தடுக்காமல் அனைவரையும் சேர்த்துக்கொள்ளு வலப்புறம் இடப்புறமும் பரவிடு
மகிழ்ந்து பாடு என் ஆத்துமாவே நன்றி கூறு என் முழு உள்ளமே கர்த்தர் செய்த நன்மைகளை நினைவு கூறு ஆனந்த குரல் எழுப்பி களிகூறு