பயப்படாதே பரம சேனையே
payappadaadhae parama senaiyae
பயப்படாதே பரம சேனையே!! பாடித் துதித்து முன்னேறு!! பயப்படாதே! திகைத்திடாதே! கர்த்தர் சேனையே.... உன் பார்வோன் சேனை பறந்துபோனது...
பல்லவி
எங்கள் கர்த்தர் நீரே! தெய்வம் நீரே!! இந்தியாவின் சொந்தம் நீரே!!!
கலங்கடிக்கும் இருளின் கூட்டம் கதறிக் கொண்டு ஓடப்போகுது! சபையை நெருக்கும் சாத்தான் கூட்டம் அழிக்க நினைக்கும் பகைவர் கூட்டம் சத்தமில்லா சிதறப் போகுது..
பல்லவி
எங்கள் கர்த்தர் நீரே! தெய்வம் நீரே!! இந்தியாவின் சொந்தம் நீரே!!!
தடையைப் பார்த்து தயங்கிடாதே! தானியேலின் தேவன் நம்முன்னே.. எதிர்க்க நினைக்கும் எதிரிகளை இடறி சரிந்து வீழ்த்திவிட யூத ராஜ சிங்கம் நமக்குண்டு.
பல்லவி
எங்கள் கர்த்தர் நீரே! தெய்வம் நீரே!! இந்தியாவின் சொந்தம் நீரே!!!