பயப்படாதே நீ
payappadaadhae nee
பயப்படாதே நீ மகிழ்ந்து களிகூரு இஸ்ரேலின் ராஜா உன் நடுவில் இருக்கின்றார் இராஜாதி இராஜா உன் நடுவில் இருக்கின்றார்
உன் ஆக்கினை அகற்ற உன் சத்துரு விலக்க
உன் தேவன் உன் நடுவில் வந்திருக்கின்றார் உன் கர்த்தர் உனக்காக யாவும் செய்திடுவார் - (2)
1. தள்ளுண்ட உன்னையும் தன்னோடு சேர்த்திட தடுமாறும் உன்னையும் தாங்கிப் பிடித்திட வெட்கப்பட்ட தேசத்தில் உன் தலையை உயர்த்திட கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் நீ சிறந்து விளங்கிட
2. சிங்கத்தின் கெபியில் நீ சிக்கிக்கோண்டாலும் சூளையின் ஜூவாலை உன்னை சூழ்ந்துகொண்டாலும் அழுகையின் பள்ளத்தில் நீ நடந்து வந்தாலும் தண்ணீரற்ற உளையில் நீ அமிழ்ந்து போனாலும்