பயப்படாதே கர்த்தர் உன்னை
payappadaadhae karthar unnai
பயப்படாதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் திகையாதே தேவன் இன்று நினைத்து விட்டார்
இராப்பகலாய் பரிந்து செய்வார் பராமரித்து வழிநடத்துவார் உறங்காமலும் அவர் தூங்காமலும் - உன் வேண்டுதலை நிறைவாக்குவார்.
துன்பம் துக்கம் வந்தாலுமே - அது துயரமாய் மாறினாலுமே துரத்திடுவார் அதை விரட்டிடுவார் - நீ துதித்து துதித்து மகிழ்வாய்
இதுவரை உதவிச் செய்தார் இனிமேலும் உதவி செய்வார் இன்றைக்கு காணும் எகிப்தியனை இனி என்றுமே காணமாட்டாய்
புது பெலன் பெற்றிடுவாய் புது எண்ணையால் நிறைவாய் கழுகினைப் போல கதிரவன் உம்மை கருத்துடன் நடத்திடுவார்
பனையைப் போல் செழித்திடுவாய் கேதுரு போல் வளர்ந்திடுவாய் கர்த்தரின் இல்லத்தில் கனிதரும் கொடியாய் செடியுடன் படர்ந்திடுவாய்