பத்துப் பேரை சுகமாக்கினீர்
pathup perai sugamaakkineer
பத்துப் பேரை சுகமாக்கினீர் பரிகாரி நீர் இயேசப்பா ஒன்பதுபேர் காணவில்லை ஒருவர் மட்டும் நானப்பா செய்த நன்மை நினைக்கிறேன் நன்றியோடு துதிக்கிறேன் நல்லவரே நன்மை செய்தவரே
1. பெற்றெடுத்த தாய் தகப்பன் பிரியமாய் தொடவில்லை அண்ணன் தம்பி கூட என்னை ஆசையாய் பார்க்கவில்லை தொட்டு சுகமாக்கினிரே குஷ்டமெல்லாம் நீக்கினிரே செய்த நன்மை நினைக்கிறேன் நன்றியோடு துதிக்கிறேன் நல்லவரே நன்மை செய்தவரே
2. குருடனாய் நான் பிறந்தேன் கோயிலருகே கிடந்தேன் பிழைக்க வழியில்லை பிச்சையெடுத்து வாழ்ந்தேன் பாசம் என்மேல் வைத்திரே பார்வையைத் தான் கொடுத்தீரே செய்த நன்மை நினைக்கிறேன் நன்றியோடு துதிக்கிறேன் நல்லவரே நன்மை செய்தவரே
3. மகிமயின் தேவன் உம்மை அறியாமல் நான் அலைந்தேன் மரணபயத்தினையே சரீரத்தில் நான் சுமந்தேன் மரண பயம் நீக்கினிரே மறுவாழ்வு தந்தீர செய்த நன்மை நினைக்கிறேன் நன்றியோடு துதிக்கிறேன் நல்லவரே நன்மை செய்தவரே