பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே
parisuthathil neer magathuvam ullavarae
பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே துதிகளில் நீர் பயப்படத்தக்கவரே-2 யுத்தத்திலே வெற்றியை தருபவரே அற்புதங்கள் எப்போதும் செய்பவரே-2
உம் வலக்கரம் எதிரியை அழிக்குமே உம் மகத்துவம் நிர்மூலமாக்குமே-2
1.நாசியின் சுவாசத்தினாலே ஜலம் குவிந்து நின்றது வார்த்தையின் வல்லமையாலே கடல் இரண்டாய் பிளந்தது-2-உம் வலக்கரம்
2.உருவின பட்டயத்தோடு எனக்கு முன் நீர் செல்வதால் பகைஞர் தங்களுக்குள்ளே வெட்டுண்டு மடிந்து விழுந்தாரே-2-உம் வலக்கரம்