பரிசுத்தரே பரம்பொருளே
parisutharae paramborulae
பரிசுத்தரே பரம்பொருளே பரானாவியே என்னில் வாரும் வாரும் தூய ஆவியே வாரும் ஆவியே
தேறுதலக்காய் தேடி அலைந்தேன் தேற்றுவார் யாரும் இல்லை என் தேற்றரவாளனே வாரும் என்னை தேற்றிடும் ஆவியே வாரும்
உலகிலே காணாத உத்தம ஆவியே உன்னதத்திலிருந்து வாரும் என் உள்ளத்தில் தங்கிட வாரும் என்னை உணர்த்தும் ஆவியே வாரும்
கல்விமானை வெட்கப்படுத்த பைத்தியத்தின் மேல் வாரும் என் பரிசுத்த ஆவியே வாரும் என்னை பரிசுத்தமாக்கிவிடவே வாரும்
மலைகளைப் மிதித்து குன்றை பதறாக்க மகிமையின் ஆவியே வாரும் - இந்த மாம்சமான என் மேல் வாரும் என்னை மகிமைப் படுத்திட வாரும்
வானமண்டலத்து சேனையை அழிக்க வான் புறாவே வாரும் அந்த வானங்களை கிழித்து நீர் வாரும் உம் வல்லமையோடிறங்கி வாரும்