பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
parisuthar yesu uyirthezhundhaar
பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் புகழ் செலுத்தி மகிழ்வோம் அன்றதி காலை, மூன்றாம் நாளில் சொன்னபடி எழுந்தார்
சடுதி பூமி அதிர்ந்தது சரீரம் வைத்த கல்லறை அற்புதமாக திறந்திடவே ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் தேவனின் வல்ல செயலலிதுவே தேவனால் கூடாத தொன்றில்லை கலங்கிடாமல் நம்பிடுவோம் கைவிடமாட்டார் கடைசி வரை
அழிவைக் காணார் பரிசுத்தர் அகல பாதாளம் வென்றார் பூமியிலே தாழ்விடங்களிலே புண்ணியரசு இறங்கினார் சிறை பட்டவரை சிறையாக்கிய சிறந்த வரங்கள் அளித்தார்
வானாதி வானம் ஏறினார் வலது பாரிசம் வீற்றிடவே
புதிய ஜீவ மார்க்கமாய் பரம தேவ சந்நிதி பரிந்து பேச எமக்காக பூரண மீட்பை நாம் அடைய மெல்கிசேதேக்கின் முறைப்படி மா பரிசுத்த ஸ்தலத்திலே மகா பிரதான ஆசாரியர் மன்னன் கிறிஸ்து பிரவேசித்தார்.
பரிசுத்தாவி பெலத்தினால் மரித்தவர் எழுந்தாரே சரீரம் தம் திருச்சபையில் சத்திய ஆவி பொழிந்தனர் ஆவியாய் தேவன் இறங்கிடவே ஆவியால் தேகம் நிரம்பிடுதே அகமதில் உலாவுகின்றார் ஆனந்த பாக்கியம் அடைகிறோம்
பரம சீயோன் சேருவோம் மரணமோ நம் ஜீவனோ கடைசி நேரம் கேட்டிடுவோம் எக்காள சத்தம் முழங்கிடும் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் கல்லறை திறக்க எழும்பிடவே மறுரூபம் கண் இமை பொழுது மகிமை அடைந்து பறந்து செல்வோம்