பரிசுத்தர் பரிசுத்தரே
parisuthar parisutharae
பரிசுத்தர் பரிசுத்தரே - பரனே இயேசு கிறிஸ்துவே ஜீவாதிபதியே பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தமில்லாமல் பராபரனே உமைத் தரிசிக்கமாட்டர் ஓர் போதும் ஒருவரும் - பரி
1. கிருபாசனப்பதியே திருவருள் தனை ஈந்தெமைத் தேற்றியே காத்திடும் கிருபையினாலடியார் உம்மை நிலைத்திட கேதமில்லாத நின் தாழ்மையை ஈந்திடும்
2. பரிசுத்தர் பரிசுத்தர் - நீர் பரிசுத்தரே யென சேராபீன் பாடிடும் மகிமையால் நிறைந்த இப்பரிசுத்தமாமிதை மானிடர் மெமக்கீந்திட விரும்பிய - பரி
3. பாடுகள் சகிப்பதினால் பரலோகத்தில் சேர நம் பாதையைத் திறந்தீர் பரிசுத்த அலங்கார நூல் வஸ்திரம் பாடுகள் சகித்து நாம் அணிந்திட விரும்பிய
4. சமாதான காரணர் - நம்மில் ஆவியை ஊற்றியே சமாதான மின்திட்ட சமாதான நிறைவினால் பரிசுத்தராகிய கறைதிரையில்லா மணவாட்டியை விரும்பிய - பரி
5. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - துாய ரூபம் நாமணிய எம் சாயல் நீர் ஏற்றத்தால் ஸ்தோத்திர பாத்திரனே அதிகாலையில் தூய உம் சமூகத்தில் நான் மகிழ்ந்திடுவேன் - பரி