பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே வல்லமையுடையவரே
parisuthar parisuthar yesuvae vallamaiyudaiyavarae
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே வல்லமையுடையவரே வான் புவி உந்தன் மகிமையால் நிறைந்தனவே
ஓசன்னா ஓசன்னா வானில் ஓசன்னா
கர்த்தர் செய்த நன்மைக்காய் என்னத்தை செலுத்திடுவோம் இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து நாம் தொழுதிடுவோம்
மகிமை மாட்சிமை நிறைந்தவர் ஆண்டவர் பெரியவர் அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம்
அன்பு உருக்கம் அடையவர் அன்பால் நிறைந்தவரே அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம்
தாழ்மை இரக்கம் நிறைந்தவர் தயவால் நிறைந்தவரே இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம்
நாவுகள் உம்மை துதித்திடும் முழங்கால் மடங்கிடுமே கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம்