பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
parisuthar parisuthar yesuvae
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே நீர் தரிசித்தும் பாதந்தனை துதி சொல்லுவோம் கரிசனையோடெம்மை கைத்தலந்தனிலே பரிவுடன் சுமந்தீர் அன்பே நீர் - பரிசுத்தர்
1. சோதனையதிலெமக்கோர் ஜெயக் கொடியே வேதனையதிலுற்ற ஒப்பற்ற துணையே மேதினி தன் பெறும் சீயோனின் வழியாய் வேதனே எம்மிலே ஜீவிக்கிறீர் - பரி
2. கங்குல் தனிலே கலிபோக்கிட கனிந்தே நீங்கிடாது சீயோனின் தீபமாய் திகழ்ந்தார் பங்குறும் தினம் வரை உன் சாயலிலே பாங்குடன் காப்பீரே காசினியில் -- பரி
3. இத்தரை ஒழித்து மே சித்திரை கடந்தே இத்தரையதில் துயர் நித்திரை யுறவே சத்தியரே நீர் வருவீரோ எக்கணம் நித்திய மகிமையை அடைந்திடவே - பரி
4. யாவையும் எனக்காக செய்து முடிப்பீர் யாரிலும் சிறந்தவர் இயேசுவே எமக்கே யாவே தம் மகிமையை கண்டதால் உம்மிலே யார் பின்னே ஏகுவோம் நீரன்றி - பரி
5. துயிலெழும் காலமிதே ஆவியில் நிறைந்து உயிரடைந்தவர் சேவை செய்திட வருவீர் அதி சுதந்திரம் பெறும் காலை விடாதே பதிவர் சபையுனக்கோர் உறவே - பரி