பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
parisuthar koottam yesuvaip potri
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட பரமானந்த கீதமங்கேயெழும்ப நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே.
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அவர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே
சோதனைகளை வென்றவர் எவரும் துன்பம் தொல்லைகளை சகித்தவரும் ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே
ஜீவ விருட்சத்தின் கனி தின்று ஜீவ நதி நீரை என்றும் குடித்து ஜீவ கிரீடமும் சிரசில் சூடி நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே
ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம் திரு முடி யணிந்திலங்கிடவும் தேவ சேயர்களாக எல்லாரூம் மாற நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே
கன்னிகையைபோல் கர்த்தர் சபையன்று மன்னர் மணாளன் இயேசுவை மணந்து பின்னும் சொல்லரி தாம் நிலை ருசிக்க நீ அங்கிருப்பாயோ (3) சொல் என் மனமே
பேதுரு பவுலும் யோவானும் அங்கே பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் இரத்தச் சாட்சிகளும் திரளாய் கூட நீ அங்கிருப்பாயோ - சொல் என் மனமே?