பரிசுத்தனாக்கிடும் பார்த்திபனே யான்
parisuthanaakkidum paarthibanae yaan
பரிசுத்தனாக்கிடும் பார்த்திபனே யான் அதிசுத்தனாக நடந்திடவே
பரிசுத்தமுள்ளோரே பரனைத் தரிசிப்பார் பரலோக ராஜ்ஜிய பிரவேசமடைவார்
1.திருரெத்தம் சிந்தினீர் தீயனெனை அதிசுத்தனாகவே ஆக்கிடவே பரிசுத்த ஆவியின் பலமதை ஈந்தே பரலோக பாதையில் பதித்திடும் மனதை
2. மாயஜடம் எனை மயக்கிடாமல் பேயின் வலை எனைப் பிடித்திடாமல் தீய லோகம் எனைத் தடுத்தழிக்காமல் தினம் தினம் கிருபையால் திடப்படுத்திடுவீர்
3. உம்மைப் போல் ஜீவித்து உத்தமனாக உம்மையே காண்பிக்க உலகத்துக்கு உம்திரு வசனத்தை ஊக்கமாய் உரைக்க உமது நல்ஆவியை ஊற்றிடும் நிறைவாய்