பரிசுத்தம் பெற உம்மண்டை
parisutham pera ummandai
பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து நிற்கும் மாபாவி நான் – எனை ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து கிருபையால் பெலப்படுத்தும்
இதயக்கதவை திறந்தேனே என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி பெலவீனம் யாவையும் போக்கி காத்துக்கொள்ளும் இறைவா
பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும் இணைந்து ஒலிக்குதே – ஆனால் மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட என் செவியை திறந்திடுமே
என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால் தவறி விடுவேனே – ஆனால் உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால் ஒருபோதும் தவறிடேனே