பரிசுத்தம் நாடு யேசுடன் பேசு
parisutham naadu yesudan pesu
1. பரிசுத்தம் நாடு யேசுடன் பேசு தூயரிலே நிலை அவர் வாக்கைக் கேள் பக்தரைச் சிநேகி ஏழையைத் தாங்கு கர்த்தர் ஆசீர் தேட எப்போதும் நினை.
2. பரிசுத்தம் நாடு அமளியிலும் தனித்து மன்றாடு யேசுவோடேயே யேசுவை நோக்கினால் அவர் போலாவாய் யேசு சாயல் உன்னில் நண்பர் காணுவார்.
3. பரிசுத்தம் நாடு யேசு வழியில் துணை முன் ஓடாதே என்ன வந்தாலும் இன்ப துன்பத்திலும் கர்த்தரைப் பின்செல் இம்மானுவேல் நோக்கி வேதத்தை நம்பு.
4. பரிசுத்தம் நாடு ஆன்மாவில் அமர் தூண்டும் எண்ணம் யாவும் அவர் ஆளட்டும் அன்புக்குன்னை ஆவி கொண்டு வரட்டும் உன்னத சேவைக்கு உயர்த்திடட்டும்.