பரிசுத்தாவியே எழுந்தருளிடுமே
parisuthaaviyae ezhundharulidumae
பரிசுத்தாவியே எழுந்தருளிடுமே எழுந்தருளிடுமே என்னை நிரப்பிடுமே மண்மயமான என் மக்கிய சரீரத்தில் உம் சக்தி பகரணுமே வல்லமை பொழிந்திடுமே
மனுவேலர் இயேசு மூழ்கி எழுந்த யோர்தான் நதிக்கரையில் வெள்ளைப்புறா போல் நாதரில் இறங்கி நல்லதோர் சாட்சியிட்டீர் சாட்சியாய் நிறுத்திடுமே--அடிமையை சாட்சியாய் நிறுத்திடுமே
மேல் வீட்டறையில் சங்கமித்த பூர்வ பிதாக்கள் மேலே அக்னி நாவுகளால் அன்பினை பொழிந்து அபிஷேகம் செய்தவரே அபிஷேகம் பொழிந்திடுமே - அடிமை மேல் அபிஷேகம் பொழிந்திடுமே
பிரபஞ்ச ஆசையாலே என் இரட்சகரை பரீட்சித்த சத்ருவினை தகர்த்திட்டீர் எந்தன் நாதனிலிருந்த பரிசுத்தாவியே ஜெயம் பெற செய்திடுமே - அடிமையை ஜெயம் பெற செய்திடுமே
மறுரூப மலையில் மகிபன் இயேசுவை மறுருபமாக்கினீரே வெண்பஞ்சு மேகம் போல் என்னிலும் இறங்கி மறுரூப மாக்கிடுமே மறுருபமாகணுமே - அடிமையை மறுரூப மாக்கணுபே
கிறிஸ்துவைமரித்தோரிடமிருந் தெழும்பின பரம பிதா ஆவியே சாவுக்கேதுவான சரீரமாம் என்னையும் உயிர்த்திட செய்பவரே உயிர்த்திட செய்திடுமே - அடிமைக்கும் உயிர் மீட்சி தந்திடுமே