பரிசுத்தாவியானவர் எங்கள்
parisuthaaviyaanavar engal
பரிசுத்தாவியானவர் எங்கள் மீதினிலே - இறங்கி வல்லமையாக கிரியை செய்யும்
1. பெந்தெகொஸ்தின் தினமதிலே வந்திறங்கிய சீஷர்களை சந்திப்பதுபோல் ஏழைகள் மீது எந்தையே அமர்ந்திடுவீர் - பரி
2. பற்பல பாஷைகள் பேசிடுவோம் தற்பரன் மாண்பினை உழைத்திடுவோம் அற்புத அடையாளம் செய்திடப் பாரில் சொற்படி அருள் மாரி பொழிவீர் - பரி
3. பேயின் சக்தி தகர்ந்திடவே நோயின் பெலனும் அகன்றிடவே சோரும் உள்ளங்கள் உணர்ந்தெழும்பிடவே தாரும் ஓர் அபிஷேகம் தயவாய் - பரி
4. ஆதியன்பு குறைந்திடுதே ஆதிக் கிரியை மறைந்திடுதே ஆத்துமாக்கள் மாள்வதைக் காண ஆறுதல் இல்லையே சுவாமி - பரி
5. ஆவியால் உன் அன்பை ஆழ்ந்த ருசிக்க அளித்திடுமே அன்பில்லாத அனுபவம் நீங்க அன்பரே! இரங்கிடுவீரே - பரி