பரிசுத்தாவி எங்கள்
parisuthaavi engal
பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் இந்த வேளையிலே பிரசன்னத்தால் நிரப்பி எம்மை புது சக்தியை அளித்திடுமே
இம்மண்டலம் முழுவதையும் உம் ஆவியால் நிரப்பி விடும் அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி அந்தகாரத்தை நீக்கிவிடும்
தேவ செய்தி அளிக்க விருக்கும் தேவ பிள்ளையைப் பெலப்படுத்தும் தேவலோகத்தின் இரகசியங்களை தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும்
பேயின் சக்தி தகர்த்திடவே நோயின் சாபம் அகற்றிடவே வல்லமை தாரும் பெலமும் அருளும் வரம் தந்தெம்மை அபிஷேகியும்
பரலோகத்தின் அதிபதியே பரலோகத்தின் பல கனிகள் திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும் திருப்திப் படுத்தி அனுப்பும்