பரிசுத்த பாதையில் என்றுமே
parisutha paadhaiyil endrumae
பரிசுத்த பாதையில் என்றுமே நான் சென்றிட, பரனே நான் என்னையே முற்றிலும் படிக்கிறேன். !
1. இயேசுவே! உம் அழகான என்னில் பிறர் காண இவ் வேளையில் என்னை தத்தம் நான் செய்கிறேன் இறங்கிடுவீர் எந்தன் வேண்டுதல் கேட்டு இனிதே இவ்வுலகில் பிரகாசித்திடவே --பரிசுத்த
2. என்னைக் காண்போர் உம்மை காண உந்தன் சாயலை தரித்திர லோகத்தில் நான் தூய்மை அடைய, ஈசனே! நீர் அருள் பிழிந்திடுவீரே, இன்று இந்த ஜெப வேளையில் பெற்றெழும்ப
3. ஆவியில் மேன்மேலும் அனலாய் நான் ஜீவிக்க ஆசீர் பொழிந்திடும் எந்தன் நேசர் இயேசுவே! மாசில்லா பரிசுத்தம் அடைந்திடவே மன்னவனே உம் கிருபை ஈந்திடுவீர்
4. உம் பெலன் இல்லாமல் யாதும் செய்ய இயலான் உலகில் ஜீவ சாட்சியாக விளங்க, உன்னத பெலன் ஈந்து நிறைத்திடுமே உமக்காக ஜீவிப்பேன் எக்காலத்திலுமே
5. மண்ணுலக இன்பங்களை ஒன்றும் வேண்டேனே, மாமிச இச்சைகள் நித்தம் நான் வெறுக்கிறேன்; விண்ணவர் சாயலை மகிமையாய் பெற்றுக் கண் இமை பொழுதில் வேகம் மாறிடுவேன்.