பரிசுத்த குலம் நீங்கள் பலியிட வாருங்கள்
parisutha kulam neengal paliyida vaarungal
பரிசுத்த குலம் நீங்கள் பலியிட வாருங்கள் இறைவனுக்குரியவர்கள் என்றும் இறைபுகழ் கூறுங்கள் அரச குருத்துவமே தூய ஆவியின் ஆலயமே இறைவன் அழைத்த இனமே இதை அறிந்து வாழ்மனமே
ஒளியின் மைந்தர் நீங்கள் இந்த உலகினில் ஒளிர்ந்திடுங்கள் முடிவில்லா வாழ்வதையே நீங்கள் முதன்முதல் தேடிடுங்கள் மறையுடல் உறுப்புகளாய் என்றும் ஒன்றித்து வாழ்ந்திடுங்கள்
இறைவாக்குரைப்பவராய் இந்த இகமதில் திகழ்ந்திடுங்கள் தந்தை இறைவனின் சிறுமந்தையும் நீங்கள்
ஆயனின் மேய்ச்சலில் புதுவாழ்வையும் கண்டிடுங்கள் அகஒளி ஏற்றிடவே தெய்வ அருள் ஒளி பெற்றிடுங்கள் பெற்ற இப்பெருவாழ்வை இங்கு பிறருடன் பகிர்ந்திடுங்கள்